தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் இன்று பள்ளிகள் திறப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு வருகை தந்த மாணவ, மாணவிகளை பூக்கள் மற்றும் இனிப்பு கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் ஆசிரியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. முதல்நாளான இன்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த 3 லட்சத்து 35 ஆயிரம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனர்.

சென்னை, அசோக் நகர், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் பள்ளிகளுக்கு தங்கள் பெற்றோர்களுடன் ஆர்வமுடன் வருகை தந்தனர். 

varient
Night
Day