தமிழகத்திற்கு 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு தர வேண்டிய 31.24 டி.எம்.சி நீரை திறந்துவிட கர்நாடகா அரசுக்கு  காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 117-வது கூட்டத்தில்  தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா தடையின்றி வழங்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணைய 41-வது கூட்டம் நாளை நடைபெற உள்ளது. 

Night
Day