தன்னை கட்சியிலிருந்து நீக்கியது சர்வாதிகார நடவடிக்கை - செங்கோட்டையன் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

கட்சியில் இருந்து தன்னை நீக்கி எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சரும், கழக மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சிக்கு துரோகம் செய்தது யார்? என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும், துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கலாம் என்றும் விமர்சித்தார். புரட்சித்தாய் சின்னம்மாவிடம் இருந்து எடப்பாடி பழனிசாமி எப்படி பதவியை பெற்றார் என்பதை நாடறியும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Night
Day