தனியார் மாலில் லிஃப்ட் பழுதுபார்ப்பின்போது விபத்து - தொழிலாளி பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராயப்பேட்டையில் லிஃப்ட் பழுதுபார்த்தபோது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராயப்போட்டையில் அமைந்துள்ள தனியார் மாலில் லிஃப்ட் பழுதடைந்துள்ளது. இந்நிலையில், பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் லிஃப்டில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது, திடீரென லிஃப்ட் வேகமாக மேலே சென்று மோதியுள்ளது. இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ராஜேஷ் உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். உரிய இழப்பீடு வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று ராஜேஷ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.   

Night
Day