டோக்கனுக்கு ரூ. 1 லட்சமாம்..! தாகூருக்கு தாராள மனசு..!

எழுத்தின் அளவு: அ+ அ-

மகாலட்சுமி திட்டம் மற்றும் இளையோர் நிதி திட்டம் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தருவதாக கூறி, காங்கிரசார் டோக்கன் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கியது ஆதராங்களுடன் அம்பலமாகியுள்ளது.

வாக்காளர்களுக்கு லட்ச ரூபாய் தருவதாக கூறி காங்கிரஸார் டோக்கன் விநியோகித்த காட்சிகள்தான் இவை...

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் தொகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு செல்லுமிடடெல்லாம் எதிர்ப்பு வலுத்து வருவதால், பணப்பட்டுவாடா மற்றும் பல்வேறு கவர்ச்சிகர வாக்குறுதிகள் மூலம் வாக்காளர்களை கவர குறுக்கு வழியை கையில் எடுத்துள்ளனர்.

அதன் ஒருபகுதியாக விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக காங்கிரஸார் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருவது தற்போது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.

விருதுநகர் 12வது வார்டு தந்தி மர தெருவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜ் என்பவர் மளிகை கடையில் வைத்து வாக்காளர்களிடம் காங்கிரஸ் கட்சி சின்னமான கை சின்னத்தில் வாக்களித்தால், பெண்களுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாயும், ஆண்களுக்கு இளையோர் நிதி திட்டம் மூலம் ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

அதற்காக வாக்காளர்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் செல்போன் எண்ணை பதிந்து கொண்டு சீரியல் நம்பருடன் டோக்கனும் வழங்கியுள்ளார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாஜகவினர், மளிகை கடை ஒன்றில் டோக்கன் வழங்கி கொண்டிருந்த காங்கிரஸ் நிர்வாகி காமராஜை கையும் களவுமாக பிடித்து தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர், காமராஜ் வைத்திருந்த 30க்கும் மேற்பட்ட டோக்கன்களை பறிமுதல் செய்து அவரை விசாரணைக்காக மாவட்ட உதவி தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் அந்தோணி ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், டோக்கன் விநியோகித்த காங்கிரஸ் பிரமுகர் காமராஜ் மீது, இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மகாலட்சுமி திட்டம் மற்றும் இளையோர் நிதி திட்டம் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தருவதாக கூறி, காங்கிரஸார் டோக்கன் விநியோகித்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day