தமிழகம்
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட மறுப்பு
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புகனமழ?...
வேலூரில் டெங்கு காய்ச்சலுக்கு 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கே.வி.குப்பம் அருகே உள்ள மேல்விழாச்சூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கோவிந்தராஜ் என்பவரின் மகள் சிவானி, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுமி, கடந்த 7ம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தநிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்பதால் டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய் தொற்றுக்களுக்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புகனமழ?...
சக்தீஸ்வரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புஅஜித்குமார் தாக்கப்பட்டதை வீடி...