டீ, காஃபி விலை உயர்வு - டீக்கடை உரிமையாளர் சங்கம் விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் மூலபொருட்களின் விலை உயர்வால் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது தங்களின் முடிவல்ல என டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. 

சென்னையில் ஒரு சில டீ கடைகளில் 10 மற்றும் 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீ 15 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட காபி 20 ரூபாய்க்கும் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.     மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் விலை ஏற்றப்படுவதாக டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்கம்  மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அச்சங்கத்தின் தலைவர் ஆனந்தன், சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்கம் 45 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும்  விலையேற்றம்  பற்றி சங்கம் முடிவு செய்வதில்லை என கூறினார்.  விலைவாசியை பொறுத்து கடை உரிமையாளர்களே டீ, காபி விலையை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருவதாகவும் சங்கம் மூலமாக விலையை ஏற்ற வில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். 

Night
Day