ஜம்மு காஷ்மீர் மாணவருக்கு சீட் வழங்காத மருத்துவ கல்லூரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கட்டுப்பாட்டை மதிக்காததால் மட்டுமே ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மாணவருக்கு சீட் வழங்கவில்லை என கோவை KMCH மருத்துவக் கல்லூரி விளக்கம் அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஷுபைர் அகமத் என்ற மாணவன், கோவை KMCH மருத்துவக் கல்லூரியில் சிறுநீரகவியல் துறைக்காக கலந்தாய்வுக்குச் சென்றுள்ளார். அப்போது தாடியை எடுக்க வேண்டும் என்றும் ஆடைக் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் மட்டுமே சீட் வழங்கப்படும் என்றும் மாணவரிடம் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதாக கூறிய பின்பும், கல்லூரி நிர்வாகம் சீட் தர மறுப்பதாக மாணவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு விளக்கமளித்துள்ள கல்லூரி நிர்வாகம், தாடியை நீக்கிவிட்டு மாணவர் வரும்பட்சத்தில் சீட் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Night
Day