அரசுப் பள்ளியில் வெடித்து சிதறிய சிலிண்டர்

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அரசு பள்ளி சமையல் கூடத்தில் காலை சிற்றுண்டி சமைத்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து தீபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலப்பட்டி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்காக காலை சிற்றுண்டி சமைக்க சமையலர் லட்சமி கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பில் தீடிரென தீப்பற்றியது. இந்த தீ விபத்தில் சமையல்கூடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. அலறியடித்து வெளியே ஓடி வந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணப்புத்துறையினர் மற்றும் போலீசார் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Night
Day