சேலம்: 238 முறை தோல்வி - கலங்காமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் முதியவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

238 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முதியவர் ஒருவர் வருகிற மக்களவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறார். சேலம் மேட்டூரில் டயர் பழுது பார்க்கும் கடை வைத்திருக்கும் 65 வயது முதியவரான பத்மராஜன் கடந்த 1998 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இருந்து குடியரசு தேர்தல் வரை அனைத்திலும் போட்டியிட்டு இதுவரை 238 முறை போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் வருகிற மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் இவர் இதுவரை நடைபெற்ற தேர்தலில் நரேந்திர மோடி, அடல் பிகாரி வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோருடன் போட்டியிட்டு தோற்றது குறிப்பிடத்தக்கது. 

varient
Night
Day