செப்.15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்- புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை செலுத்துகிறார்

எழுத்தின் அளவு: அ+ அ-

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 15ம் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். 

கழகப் பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் வாழ்வில் நீக்கமற கலந்திருப்பவரும், நம் இயக்கத்தின் உயிர் மூச்சாகவும், தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்கென வாழ்ந்த மாபெரும் தலைவராகவும் விளங்கிய பேரறிஞர் அண்ணாவின் 117-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 15ம் தேதி திங்கள்கிழமை அன்று, காலை 10 மணிக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக மக்களின் அன்பும், ஆதரவும் எந்நாளும் தொடர பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை மனதில் ஏற்று, புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் காட்டிய அதே வழியில் மக்கள் தொண்டில் முழு மனதோடு பாடுபட, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளினை அனைவரும் ஒன்றிணைந்து சிறப்புடன் கொண்டாடிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பெருமைக்குரிய நிகழ்வில் பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுபவர்களும், புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களான அன்பு உடன்பிறப்புகளும், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் பயணிக்கும் கழகத் தொண்டர்களும், கழக நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும், ஜாதி, மத பேதமின்றி, அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்வதாக கழகப் பொதுச்செயலாளரின் முகாம் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Night
Day