சென்னை : தங்கம் விலை சவரன் ரூ.50,000 - பொதுமக்கள் அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து, வரலாறு காணாத உச்சமாக 50 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப ஆபரண தங்கத்தின் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது. பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும்போது தங்கம் விலை உயர்கிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து வரலாறு காணாத உச்சமாக 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், பார் வெள்ளி கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவது மற்றும் இரு வல்லரசு நாடுகளின் போர் காரணமாக உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழலில், பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்வதே விலை ஏற்றத்திற்கு காரணம் என நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். வரும் வாரங்களில் மேலும் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Night
Day