சென்னை : சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்காக பச்சை நில நிழற்கூரை அமைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

வெயிலின் தாக்கத்தால் சென்னையில் உள்ள பல்வேறு சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்காக மாநகராட்சியினர் பச்சை நிற நிழற்கூரையை அமைத்துள்ளனர்.


தமிழகத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்காக எழிலகம், திருவான்மியூர், அண்ணாநகர், அண்ணா சாலை, தியாகராயநகர் உள்ளிட்ட பல்வேறு சிக்னல்களில் பச்சை நிற நிழற்கூரையை மாநகராட்சி அதிகாரிகள் அமைத்தனர். ஒவ்வொரு சிக்னல்களிலும் வாகன ஓட்டிகள் 5 நிமிடம் வரை வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Night
Day