சென்னை, மயிலாடுதுறையில் 20 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு ஆதரவாக ஆட்களை சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழகம் முழுவதும் 20 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆதரவாக ஆட்களை சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் 5 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

varient
Night
Day