சென்னையில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் - இயந்திரக் கோளாறு - 136 பேர் உயிர் தப்பினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையிலிருந்து கோவைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட இயந்திரக்கோளாறால் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டதால் 136 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானம் 128 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 136 பேருடன் பகல் 1.50 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமானி அதனை உடனடியாக கண்டுபிடித்து சாதுர்யமாக விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதனால் விமானத்தில் பயணம் செய்த 136 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். 

varient
Night
Day