சென்னை : ஹவாலா பணப்பரிமாற்றம் - 5 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற என்.ஐ.ஏ.

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, சென்னையில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 5 இளைஞர்களை பிடித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த நசீர் சிறையில் இருந்தபோது கைதிகளை மூளைச்சலவை செய்து பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்த வழக்கு தொடர்பாகவும், பெங்களூரு சிறையில் இருந்து பயங்கரவாதியின் வங்கி கணக்கிற்கு சென்னையில் இருந்து ஒரு லட்சம் ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த வழக்கிற்கும், பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ள என்ஐஏ அதிகாரிகள், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் ஏழுகிணறு பிடாரியார் கோயில் தெருவில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ஐந்து இளைஞர்களை பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். 

இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பருத்திக்காரத் தெருவில் உள்ள தமீமுல்ஆசிக் என்பவரது இல்லத்திலும், பட்டாணியப்பா பகுதியில் உள்ள அல்முபீத் இல்லத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே 4 மணி நேரம் நடந்த சோதனையில் ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். அவரிடம் இருந்து லேப்டாப், சிம்கார்டுகள், செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். 

Night
Day