சூப்பர் ஸ்டார் ரஜினியின் 50 ஆண்டு திரைப்பயணம் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

திரையுலகில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திரையுலகில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து சாதனைப் படைத்துள்ள அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டவனின் பரிபூரண ஆசிர்வாதத்தினாலும், கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும், 'சூப்பர் ஸ்டார்' என்ற உச்சநிலையினை அடைந்தபோதும், எளிமையான அணுகுமுறையினால், எல்லோரையும் சமமாக மதித்து, அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் திரு. ரஜினிகாந்த்தின் உயர்ந்த பண்பினை எண்ணி மிகவும் பெருமையடைவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

எளிமையின் சிகரமாக இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த், தனது அசாத்திய திறமையாலும், நடிப்பாலும் தனது திரைப்பயணத்தை தொடர்ந்து வெற்றிகரமாக மேற்கொண்டு, தமிழக மக்களின் உள்ளங்களை எந்நாளும் மகிழ்விக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள புரட்சித் தாய் சின்னம்மா, அன்பு சகோதரர் திரு. ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் எனவும் எல்லாம் வல்ல ஆண்டவனை மனதார வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.

Night
Day