சிபிஎஸ்இ அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த பள்ளி - ஹால் டிக்கெட் வழங்காததால் தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் ஏமாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சையில் உரிய சிபிஎஸ்சி அங்கீகாரம் இன்றி நடத்தப்பட்ட பள்ளியில் படித்த மாணவர்கள், ஹால் டிக்கெட் கிடைக்காததால் இன்றைய சிபிஎஸ்சி தேர்வை எழுத முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு அருகே செயல்படும் ப்ரைம் எனும் CBSE பள்ளி, அங்கீகாரம் இன்றி பள்ளியை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. 10ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு இன்று தேர்வு நடைபெறும் சூழலில், நேற்றுவரை மாணவர்களுக்கு ஹால் டிக்கட் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டபோது பள்ளியின் மீது சிலர் வழக்கு தொடர்ந்து உள்ளதால், ஹால் டிக்கெட் முடக்கப்பட்டுள்ளதாகவும், தனி தேர்வர்களாக மாணவர்களை தேர்வு எழுதுமாறு கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day