சின்னம்மாவை சந்தித்து வாழ்த்துப்பெற்ற புதுமண தம்பதிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள "ஜெயலலிதா இல்லத்தில்" அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழகத்தொண்டர்கள், நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த புதுமண தம்பதிகள் சதீஷ்குமார்-ஜோஷிகா ஆகியோர், தங்கள் குடும்பத்தினருடன் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

அப்போது, புரட்சித்தாய் சின்னம்மா, புதுமண தம்பதிகளுக்கு அட்சதை தூவி, தன் திருக்கரங்களால் மாலை எடுத்துக்கொடுத்தார். இதனைத் தொடர்ந்து புரட்சித்தாய் சின்னம்மா முன்னிலையில் மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர்.

Night
Day