சவரன் 77 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 76,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்தது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 76 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9 ஆயிரத்து 620 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதே போல், வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 134 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்த தங்கம் 77 ஆயிரத்தை நெருங்குவது நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Night
Day