கோவை: மளிகைக் கடை மற்றும் நியாய விலைக்கடையை சூறையாடிய யானைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சிறுகுன்ற பகுதியில் தொடர் தாக்குதலில் ஈடுபட்ட யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நள்ளிரவில் குட்டியுடன் வந்த மூன்று யானைகள், மளிகை கடை நடத்தி வரும் பரமேஸ்வரன் என்பவருடைய மளிகை கடையை உடைத்து உணவுப் பொருட்களை அள்ளி வீசி சூறையாடின. அப்போது பொதுமக்கள் கூச்சலிட்டும் நகராத காட்டு யானைகள் நீண்ட நேரத்திற்குப் பின் அங்கிருந்து சென்றன. இதேபோல் நல்லகாத்து பகுதியில் உள்ள சிந்தாமணி நியாய விலை கடையை உடைத்து யானைகள் சேதப்படுத்தின. இரவு நேரங்களில் யானைகள் குடியிருப்பு மற்றும் நியாய விலை கடைகளை குறி வைத்து தாக்குவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Night
Day