கோரமண்டல் நிறுவனத்திற்கு எதிராக எண்ணூரில் 40வது நாளாக போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் நிறுவனத்திற்கு எதிராக 40வது நாளாக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அமோனியா வாயுகசிவு ஏற்பட்டது. இதனால், ஏராளமானோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, ஆலையை மூட வலியுறுத்தி சின்ன குப்பம், பெரிய குப்பம், எர்ணாவூர் குப்பம், தாளம் குப்பம் உள்ளிட்ட 33 மீனவ கிராம மக்கள் 40 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ நாளில் இருந்து தொழிற்சாலை இயங்காத நிலையில், தொழிற்சாலையை நிரந்தரமாக மூடினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

varient
Night
Day