கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாயம் - மாணவர்கள் மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை நகரின் பாதாள சாக்கடை கழிவு நீர் சத்தியவாணன் வாய்க்காலில் திறந்து விடப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் தெரிவித்து பொதுமக்களுடன் பள்ளி மாணவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் சத்தியவாணன் பாசன வாய்க்காலில் திறந்து விடப்படுவதால், மன்னம்பந்தல், விளநகர் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மாசடைந்து உள்ளதுடன் ஒவ்வாமை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள், பள்ளி மாணவர்களுடன் இணைந்து ஆறுபாதி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Night
Day