கழக நிர்வாகி M.ராஜேந்திரன் மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம், குடவாசலைச் சேர்ந்த முன்னாள் மாவட்டக் கழக செயலாளர், M. ராஜேந்திரன் மறைவு குறித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவாரூர் மாவட்டம், குடவாசலை சேர்ந்த முன்னாள் மாவட்டக் கழக செயலாரும், கழக முன்னாள் ஒன்றியக்குழு தலைவரும், குடவாசல் வர்த்தக சங்கத் தலைவருமான M.ராஜேந்திரன், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். 

M. ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும்  அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day