கழகம் நிச்சயம் வெல்லும்! - தொண்டருக்கு ஆறுதல் கூறிய புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

 நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தோல்வி அடைந்ததால், மனமுடைந்த கழகத் தொண்டர் ஒருவர், தனது காலை கிழித்துக்‍ கொண்டு, தன்னைத்தானே வருத்திக்‍ கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்த, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றும் சின்னம்மா தெரிவித்தார்.

தூத்துக்‍குடி திரவியபுரம் பகுதியைச் சேர்ந்த கழகத் தொண்டர் செல்வகுமார் என்பவர், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்‍குடி, நெல்லை உள்ளிட்ட தொகுதிகளில் கழகம் தோல்வி அடைந்ததை கண்டு, மனமுடைந்தார். கழகம் தோல்வி அடையாது, உறுதியாக வெற்றிபெறும் என்ற நம்பிக்‍கையில் இருந்த அவர், திமுக தொண்டர் ஒருவரிடம், தனது ரத்தத்தை கழகத்திற்காக அளிக்கப்போவதாக தெரிவித்தார். இந்நிலையில் தேர்தல் முடிவு வெளியானதும், தனது காலை கத்தியால் கிழித்துக்‍ கொண்டார். இதனால் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழகத் தொண்டர் செல்வகுமாரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்‍கு ஆறுதல் தெரிவித்தார். "உங்களுக்‍கு குடும்பம் உள்ளது, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்‍கூடாது" என்று புரட்சித்தாய் சின்னம்மா, அறிவுரை வழங்கினார். "உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள், கழகத்தை நான் பார்த்துக்‍ கொள்கிறேன்" என்றும் சின்னம்மா அவரிடம் தெரிவித்தார். வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கழகம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும், அந்தத் தொண்டரிடம் சின்னம்மா உறுதிபட கூறினார். 

சின்னம்மா தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதும், 2026ல் கழகம் ஆட்சிக்‍கு வரும் என்று தெரிவித்ததும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கழகத் தொண்டர் செல்வகுமார் தெரிவித்தார். 


Night
Day