கள்ளக்குறிச்சி விவகாரம் - விளம்பர அரசுக்கு நடிகர் சூர்யா கடும் கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் கூட ஏற்படாத துயரம் என கள்ளக்குறிச்சி விவகாரத்தை சுட்டிக்காட்டி நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஷச்சாராயம் குடித்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்னும் தகவல் அச்சம் ஊட்டுவதாகவும், அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்வதாகவும் கூறியுள்ளார். மதுவிலக்கு கொள்கை என்பது தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே உள்ளதாக கூறியுள்ள நடிகர் சூர்யா, டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு குடித்து அடிமையானவர்கள் பணம் இல்லாத போது, 50 ரூபாய்க்கு கிடைக்கும் விஷச்சாராயத்தை வாங்கி குடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்தி வரும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாராயத்தை தடுக்க தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்..

Night
Day