தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
கரூர் மாவட்டம் கள்ளபள்ளி பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கள்ளப்பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட காவல் தெரு பகுதியில் நியாய விலைக் கடை, இடுகாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...