கருங்குளம் பகுதியில் இருசக்கர வாகன அணிவகுப்புடன் கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி, கருங்குளம் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட கருங்குளம் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்‍காக வருகை தந்த கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசுகள் வெடித்து, வாழ்த்து முழக்கங்களுடன் சின்னம்மாவுக்‍கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 


கருங்குளம் பகுதியில் பெருமளவில் திரண்டிருந்த கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍களிடையே எழுச்சியுரை ஆற்றிய கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், முறையாக கிடைப்பதில்லை என்று பொதுமக்‍கள் தொடர்ந்து புகார் தெரிவிப்பதாக குறிப்பிட்டார். 


Night
Day