கந்துவட்டி கும்பல் தாக்குதல் : ஓட்டுநர் தற்கொலை - போலீசாரும் மிரட்டியதாக புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கந்துவட்டி கும்பல் தாக்கியதால் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரகுநாதபுரத்தை சேர்ந்த விஜயகாந்த் என்பவர் தனிநபரிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கிய நிலையில், வட்டிகட்ட முடியாமல் திணறி வந்துள்ளார். இந்நிலையில் கந்துவட்டி கும்பல் விஜயகாந்தை தாக்கியதாகவும், மேலும் ஆரணி போலீசாரும் உடனடியாக பணத்தை கொடுக்கும்படி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயகாந்த் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

Night
Day