ஏழை மாணவர்கள் இரு மொழி கற்க வேண்டும் என்பதே திமுகவின் சமூக நீதி - தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பணம் இருப்பவர்கள் பல மொழிகள் கற்கலாம், ஏழை மாணவர்கள் இரண்டு மொழி தான் கற்க வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை காட்டமாக கூறியுள்ளார். 

விளம்பர திமுக அரசு வெளியிட்டுள்ள மாநில கல்விக் கொள்கை குறித்து தனது எக்ஸ் தளப்பதிவில் தமிழகம் முழுவதும், பள்ளிக் கல்வி அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட பல பள்ளிகள் கட்டிடமின்றி மரத்தடியில் செயல்பட்டு வருவதாகவும், திமுக ஒப்பந்ததாரர்களால் கட்டப்பட்ட பல பள்ளிக் கட்டிடங்கள், முதலமைச்சர் திறந்து வைத்த அடுத்த சில நாட்களிலேயே இடிந்து விழுந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவற்றை சரி செய்யாமல், வெறும் அலங்காரத்திற்காகக் கல்விக் கொள்கை என்று திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், இந்தி உட்பட பல மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுவதாகவும், ஆனால், அரசுப் பள்ளிகளில் 2 மொழிகள்தான் கற்றுக் கொடுப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறிவருவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பணம் இருப்பவர்கள் பல மொழிகள் கற்கலாம், ஏழை மாணவர்கள் இரண்டு மொழி தான் கற்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை என்றும், இதில் என்ன சமத்துவம் சமூக நீதி இருக்கிறது என்பதை விளம்பர முதலமைச்சர் தான் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Night
Day