எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் இன்று காலை மீன்பிடிக்க சென்றனர். வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த ஏழு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை நடத்திவரும் கைது நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Night
Day