எமர்ஜென்சி காலத்துக்கு அழைத்துச் செல்லும் திமுக - வானதி சீனிவாசன் கடும் கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக ஆளுநர் விவகாரத்தை விளம்பர திமுக அரசு கையிலெடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு போராட அனுமதி மறுக்கப்படும் போது ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு மட்டும் இன்று அனுமதி அளிக்கப்பட்டிருப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினர். மாணவிகள் கருப்பு துப்பட்டா போடுவதைப் பார்த்து பயப்படும் திமுக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

varient
Night
Day