ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் - விமானங்கள் ரத்து - பயணிகள் தவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெர்மனி நாட்டில் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதியடைந்தனர். 

சென்னையில் இருந்து பிராங்க் ஃபர்ட் நகருக்கு, லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெர்மனி நாட்டில் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஜெர்மனியின் பிராங்க் ஃபர்ட் நகரில் இருந்து, சென்னை வரும் விமானமும், சென்னையில் இருந்து பிராங்க் ஃபர்ட் செல்லும் விமானமும் திடீர் ரத்து செய்யப்பட்டது. இதனால், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி செல்ல விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அவதியடைந்தனர்.

Night
Day