உதகையில் இன்று 126-வது மலர்க் கண்காட்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது.

ஏப்ரல், மே மாதங்களில் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்க்கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி இன்று 126வது மலர் கண்காட்சியை தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி மே 20ம் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் ஒரு லட்சம் ரோஜா மலர்களால் டிஸ்னி வேர்ல்ட் வடிவம், 80 ஆயிரம் மலர்களால் மலைரயில் உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டின் சிறப்பாக 16 ஆயிரம் மலர்களை கொண்டு 126-th flower show என்ற வாக்கியமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெரோனியம், பால்சம், டேலியா உள்ளிட்ட 388 வகையான மலர்கள், 35 ஆயிரம் மலர் தொட்டிகள், மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. விழாக்கோலம் பூண்டுள்ள மலர்க்கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். 

Night
Day