உச்சத்தில் டெங்கு பாதிப்பு... பீதியில் மக்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் சுமார் 66 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டதாகவும், 50 பேர் உயிரிழந்ததாகவும் வெளியான தகவலால் மக்கள் பீதியடைந்துள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத விளம்பர திமுக அரசால் மக்கள் எதிர்கொண்டு வரும் துயரத்தை விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழக மக்கள் எதிர்கொண்டு வரும் துயரங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்ற விமர்னத்துக்கு ஆளாகி உள்ளது விளம்பர திமுக அரசு. நாள்தோறும் ஏதேனும் ஒரு பிரச்னை, ஏதேனும் ஒரு வன்முறை என பல விதமான துயரங்களை திமுக அரசால் மக்கள் எதிர்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அந்த வகையில் மக்களுக்கு பெரும் பிரச்னையாக தற்போது உருவெடுத்துள்ளது டெங்கு தான்... இந்த டெங்கு காய்ச்சலால் கடந்த 2023ம் ஆண்டு 9,121 பேர் பாதிக்கப்பட்டு 12 பேர் உயிரிழந்தநிலையில், 2024ம் ஆண்டு இவை இரண்டு மடங்காக அதிகரித்து 27,378 பேர் பாதிப்புக்குள்ளாகி அதில் 13 பேர் உயிரிழந்ததாக புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. 

இந்தாண்டின் ஜூன் மாதம் வரை 8,558 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் இவை இரண்டு மடங்காக அதிகரித்து 8,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அதில் 5 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 1500க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மொத்தமாக திமுக அரசு பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் 65 ஆயிரத்து 514 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை கிடைக்காமல் 50 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படும் தகவல் மக்களை நடுங்க செய்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த காய்ச்சலால் சென்னையில் இதுவரை 3,665 பேரும், திருவள்ளூரில் 1,171 பேரும், கோவையில் 1,278 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளம்பர திமுக அரசு செய்யாததே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கொசு உற்பத்தியை தடுக்க மாநகராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையும் முறையான நடவடிக்கை மேற்கொள்ளாததாலேயே டெங்கு காய்ச்சலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

பருவமழை தொடங்கியுள்ளதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உச்சமடையும் என மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், இனியாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளம்பர திமுக அரசு செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  

varient
Night
Day