எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஇஅதிமுக ஒன்றிணைய வலியுறுத்தி, தேனி மாவட்டம் கம்பம், போடி உள்ளிட்ட பல பகுதிகளில் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சார வாகனத்தை பெண்கள் உள்பட ஏராளமான கழக தொண்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
ஒன்றுபட்ட வலிமைமிக்க அஇஅதிமுகதான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்ற அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கழக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், கழகம் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைதொடர்ந்து அஇஅதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட அனைவரும் கழகம் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று பிரச்சார பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை பெண்கள் உள்ளிட்ட கழக தொண்டர்கள் ஏராளமானோர் முற்றுகையிட்டனர். கழகம் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி கழகக் கொடியை ஏந்தியபடி அவர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது.