இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு தலைவர் மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் S.M.பாக்கர் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் S.M.பாக்கர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன் என்றும், S.M.பாக்கரின் மறைவு இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய பெருங்குடி மக்களின் பாதுகாவலராக விளங்கிய S.M.பாக்கர் புரட்சித்தலைவி அம்மா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர் என்றும், அம்மாவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் எனவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

அன்பு சகோதரர் S.M.பாக்கரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

varient
Night
Day