ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது கோழைத்தனமான செயல் - விசிக தலைவர் திருமாவளவன்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது கோழைத்தனமான செயல் என விசிக கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மேடையில் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர்களை பாராட்டக் கூடியவர் என தெரிவித்தார். ஆம்ஸ்ட்ராங் மீது எந்த ஒரு போலீஸ் வழக்கும் கிடையாது என தெரிவித்த அவர் ஒடுக்கப்பட்டோருக்காக போராடும் தலைவர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்குப் பின்னணி என்ன? கூலிப் படையின் பின்னணி என்ன? என்பதை அரசு கண்டறிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

varient
Night
Day