ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ.75,560க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்​வ​தேச பொருளா​தார சூழலுக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 445 ரூபாய்க்கும் சவரனுக்‍கு 200 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் 127 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Night
Day