ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு எனக்கூறி செல்போன் செயலி மூலம் மோசடி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் டெலிகிராம் உள்ளிட்ட செல்போன் செயலிகள் மூலம் 33 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் மோசடி செய்த கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னையை சேர்ந்த தர்ஷன் என்பவர், டெலிகிராம் ஆப் மூலமாக முதலியார்பேட்டையை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகனிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர் பல்வேறு தவணைகளாக 15 லட்சத்து 40 ரூபாய் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்த பணத்தின் லாபத் தொகையை எடுக்க முயன்ற போது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதேபோல், மனோகிரி என்பவர் 16 லட்சத்து 51 ஆயிரம், கவுசல்யா 66 ஆயிரத்து 500 உள்ளிட்ட 6 பேரிடம் மொத்தம் 33 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஏமாற்றியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

varient
Night
Day