அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அடிப்படை வசதிகள் இல்லை - குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா தளங்களுக்கு சென்று பொழுதை கழிப்பது வழக்கம். அந்த வகையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை புரிந்தனர். நுழைவு கட்டணமாக 200 ரூபாய் வசூலித்துள்ள நிலையில், பூங்காவின் உள்ளே பல விலங்குகளின் இருப்பிடங்கள் பராமரிப்பு இல்லை என்று குற்றம்சாட்டினர். பல மிருங்களின் இடங்களை பூட்டி வைத்துள்ளதாகவும் மக்கள் வேதனை தெரிவித்தனர். 

Night
Day