அய்யா ராமதாசிடம் நலம் விசாரித்தார் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோரை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்றுவரும் மருத்துவர் அய்யா ராமதாசை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து உடல் நலம் விசாரித்தார். தொடர்ந்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். 

இதனைத் தொடர்ந்து அதே மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவியையும் கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்தார். அவர்கள் உடல் நலம் குறித்து விசாரித்த புரட்சித்தாய் சின்னம்மா, இருவருக்கும் வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்தார்.

varient
Night
Day