அமைச்சர் எ.வ வேலு வீடு முன்பு விவசாயிகள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மேல்மா சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அமைச்சர் எ.வ. வேலு வீட்டின் முன் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் தொழில்பூங்கா 3-ம் கட்ட விரிவாக்கத் திட்டத்துக்காக அனக்காவூர் ஒன்றியம் மேல்மா ஊராட்சி உட்பட 11 ஊராட்சிகளில் உள்ள 3 ஆயிரத்து 174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அமைச்சர் எவ வேலு வீட்டின் முன் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day