அதிமுக ஒன்றிணைந்து செயல்படும் : அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உறுதி

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக ஒருங்கிணைப்பு நடவடிக்‍கை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், விரைவில் நல்ல முடிவு தெரியவரும் என்றும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். திமுகவுக்‍கு அரசு நிர்வாகம் தெரியாததால், தமிழக மக்‍களை வாட்டி வதைத்து வருவதாகவும், விளம்பர திமுக அரசுக்‍கு மக்‍கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா எச்சரித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில், மலரஞ்சலி செலுத்திய அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, பின்னர் செய்தியாளர்களுக்‍குப் பேட்டி அளித்தார். கழக ஒருங்கிணைப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதற்கான நடவடிக்‍கைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார். நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கி இருப்பது பற்றிய கேள்விக்‍கு பதிலளித்த புரட்சித்தாய் சின்னம்மா, ஜனநாயக நாட்டில் யார், கட்சி தொடங்கினாலும் அது வரவேற்கத்தக்‍கதுதான் என தெரிவித்தார்.

புரட்சித்தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆர். பற்றி விமர்சிக்‍க திமுகவினருக்‍கு எவ்வித அருகதையும் கிடையாது என்றும், திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, வரலாறு தெரியாமல் பேசுவது வன்மையாக கண்டிக்‍கத்தக்‍கது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார். 

அரசு வேலைவாய்ப்புகளில் பல்லாயிரக்‍கணக்‍கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும், அவற்றை நிரப்ப திமுக அரசு உரிய நடவடிக்‍கை எடுக்‍கவில்லை என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார். 

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, கழகக்‍ குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சந்திப்பது வழக்‍கமான ஒன்றுதான் என்றும், அது தமிழ் பண்பாட்டின் ஓர் அம்சம்தான் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.  

தமிழக மக்‍களை திமுக அரசு வாட்டி வதைப்பதாகவும், திமுகவினருக்‍கு நிர்வாகம் செய்யத் தெரியாததால், மக்‍களிடம் வசூல் வேட்டையை முழுவீச்சில் நடத்தி வருவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார். 

தமிழகத்தில் மழை, வெள்ள நிவாரண நிதி, மகளிர் உரிமைத் தொகை ஆகியவற்றை திமுக அரசு முறையாக வழங்கவில்லை என்றும், டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்படவில்லை என்றும் புரட்சித்தாய் சின்னம்மா புகார் தெரிவித்தார். விளம்பர திமுக அரசுக்‍கு தமிழக மக்‍கள் தக்‍க பாடம் புகாட்டுவார்கள் என்றும் அவர் எச்சரிக்‍கை விடுத்தார். 

பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வின் மகனும், மருமகளும் சேர்ந்து, வீட்டுப் பணிப்பெண்ணை அடித்து, துன்புறுத்தி கொடுமைப்படுத்திய சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பாதிக்‍கப்பட்ட பணிப் பெண்ணுக்‍கு நீதியும் நியாயமும் கிடைக்‍கவேண்டும் என்றும், குற்றம் இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்பட வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார். 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கும் புரட்சித்தாய் சின்னம்மா பதிலளித்தார்.

Night
Day