தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜன்னல் கொள்ளையர்களின் அட்டகாசத்தை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களாக சுபா நகர், வி.பி. சிந்தன் நகர், முல்லை நகர், கணேஷ் நகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கிருஷ்ணா நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஆனந்தராஜ் என்பவர் வீட்டில் மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகளை திருடி சென்றனர். சனிக்கிழமை ஜன்னல் கொள்ளையர்கள் மூன்று வீடுகளில் ஜன்னலை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். இதில் ஒரு வீட்டில் ஜன்னலை கொள்ளையர்கள் உடைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...