அக். 14ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை - சபாநாயகர் அப்பாவு தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அடுத்த மாதம் 14ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த ஆண்டு இறுதியில் கூட்டப்படும் என எதிர்பார்த்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முன்பே பேரவை கூட உள்ளது. அடுத்த மாதம் 14ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இதில், 2025 மற்றும் 2026ம் ஆண்டிற்கான கூடுதல் செலவினத்திற்கான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார். எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என அப்பாவு கூறினார்.

Night
Day