"திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எண்ணம்" - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

கோடநாடு எஸ்டேட்டில் மாண்புமிகு அம்மாவின் மணிமண்டபம் கட்ட திமுக அரசு அனுமதி தர மறுப்பதாக  அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார். 

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்மாவின் மணிமண்டபத்தை அமைக்க சட்ட ரீதியாக அணுகி அனுமதி பெறுவோம் என உறுதிபட கூறினார்.  அம்மாவின் மணிமண்டபம் கட்ட அனுமதி தராவிட்டால் வரும் 2026-ஆம் ஆண்டு  தமிழக மக்கள் நிச்சயமாக அம்மாவின் ஆட்சியை எங்கள் வழியாக கொண்டு வருவார்கள் என்றும் அப்போது நாங்கள் இந்த இடத்தில் அம்மாவிற்கு மணிமண்டபத்தை கட்டி மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைப்போம் என்றும் கூறினார். மக்கள் விரோத திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பது மக்களுடைய  எண்ணமாக உள்ளதாக கூறிய அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அம்மாவின் ஆட்சியை நிச்சயமாக கொண்டு வருவேன் என்று சூளுரைத்துள்ளார். 

Night
Day