"அம்மாவின் வழியில் மக்கள் பயணத்திற்காக" திருநெல்வேலி புறப்பட்டார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

"அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" திருநெல்வேலியில் நாளை மேற்கொள்ளவிருக்கும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இதற்காக, சென்னை "போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில்" இருந்து புறப்பட்டுச் சென்றார். கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பூங்கொத்துகள் வழங்கி, சின்னம்மாவை வழியனுப்பினார்கள்.

தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில், 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை, அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார். இதற்காக, சென்னை போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் இருந்து, புரட்சித்தாய் சின்னம்மா, இன்று பிற்பகலில், சென்னை விமான நிலையம் புறப்பட்டார். 

"அம்மாவின் வழியில் மக்கள் பயணம்" புறப்பட்ட கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, கழகத் தொண்டர்கள் பூங்கொத்துகள் வழங்கி வழியனுப்பிவைத்தனர். 

முன்னாள் அமைச்சர் ஆனந்தன், பூவை கந்தன், சோழவரம் ராஜேந்திரன், காளிதாஸ், ராயபுரம் பெருமாள், ராமாபுரம் சேகர், சின்னதுரை, ஸ்ரீ தேவி பாண்டியன், கிருஷ்ணா வெங்கட், மஞ்சுளா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொன்னாடைகள் மற்றும் பூங்கொத்துகள் வழங்கி, புரட்சித்தாய் சின்னம்மாவை அன்புடன் வழியனுப்பிவைத்தனர். 

"அம்மாவின் வழியில் மக்கள் பயணம்" புறப்பட்ட அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். விமான நிலையத்தில் சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

varient
Night
Day