பார்த்திபன் இயக்கும் 'டீன்ஸ்' திரைப்படத்தின் புதிய அப்டேட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் சமூக வலைதளம் வாயிலாக 'டீன்ஸ்' திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.  

பார்த்திபன் தற்போது குழந்தைகளை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு 'டீன்ஸ்' (Teenz) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதாபாத்திரங்களை தினமும் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்த உள்ளதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்திருந்தார். அந்த வகையில் முதல் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி, கிருத்திகா ஐயர், சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு பார்த்திபன் அறிவித்துள்ளார். தொடர்ந்து 13 நாட்களுக்கு 13 கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

varient
Night
Day