நடிகர் விஜய்யின் GOAT திரைப்படத்தின் 2வது பாடல் குறித்த அப்டேட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தின் 2வது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, வைபவ், மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், முதல் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் 2வது பாடல் குறித்து ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் எழுப்பிய கேள்விக்கு, ஜூன் மாதம் பாடல் வெளியாகும் என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, விஜய்யின் பிறந்தநாள் அன்று 2வது பாடல் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 

Night
Day